குழலூது காதலன் தோள்சாய்ந்து கொண்டு
விழைவேது மின்றி மிளிர்வாட் குழலா
தொடுங்குலகு மொப்போ வுரை
குழல் ஊது காதலன் தோள் சாய்ந்து கொண்டு - குழலூதும் தனது காதலன் தோளில் சாய்ந்து கொண்டு
விழைவேதும் இன்றி மிளிர்வாளுக்கு - தனது காதலன் தோளில் சாய்ந்ததனால் வந்த நிறைவின் விழைவு அனைத்தும் தீர்ந்ததாய் ஒளிர்பவளுக்கு
உழலாது ஒடுங்கு உலகும் - முழுதுமாக அவ்வனுபவத்தில் இருப்பதனால் சுற்றி இருக்கும் உழலாது ஒடுங்கிப் போனதான உலகும்
ஒப்போ உரை- அது இக்காதல் நிறைவின் அனுபவத்துக்கு ஒப்பாகுமோ? ஆகா என்பதாம்
kuzhalUdhu kAdhalan thOLsAyndhu koNdu
vizhaivEdhu minRi miLirvAt kuzhalA
dhodungulagu moppO vurai
For the lady who shines without desires (because of its fulfillment!)gently resting on the shoulder of her lover who plays the flute, even the outside world which has come to a total halt (even without rotation and revolutions) because of her fulfilled experience, can it be compared to her? Clearly not, here the world ceases to exist that is signified by it coming to a halt and only the experience of love and the fulfillment of the lover remains and is pronounced to be far greater than the objective outside world!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக