ஞாலத் தொருபொருளை ஞானத் தடைமுடிவைச்
சீலத் தமிழ்பாடு செந்நாவாற் -காலத்
தொழியா வகையிசைக்க வல்லா ருளரோ
மழிசைப் பிரானிசைத்த வாறு
ஞாலத்து ஒரு பொருளை ஞானத்து அடை முடிவை
சீல தமிழ் பாடு செந் நாவால் காலத்து
ஒழியா வகை இசைக்க வல்லார் உளரோ
மழிசைப் பிரான் இசைத்த ஆறு ?
ஞாலத்து ஒரு பொருளை - பிரபஞத்தின் ஒப்பற்ற பொருளை - பரபிரம்மத்தை
ஞானத்து அடை முடிவை - ஞானத்தினால் அடையப் படும் முடிவை, பரம்பொருளான நாரயணனை
சீல தமிழ் பாடு செ நாவால் - சீலம் நிறைந்த தமிழ் பாடு செம்மை பொருந்திய நாவால்
மழிசைப் பிரான் இசைத்த வாறு - திருமழிசையாழ்வார் இசைத்த வகை
காலத்து ஒழியா வகை - காலத்தினால் மறைந்து போகா வண்ணம்
இசைக்க வல்லார் உளரோ - இசைத்துப் பாட வேறு யாரும் உளரோ? இல்லை என்பதாம் !
ஞாலத்தின் ஒப்பற்ற பொருளான, ஞானத்தினால் அடையும் முடிவாய் விளுங்கும் பரம்பொருளான ஸ்ரீ மன் நாராயணனைச் சீலத் தமிழ் பாடு செந்நாவால் காலத்தால் அழியா வகை திருமழிசைப் பிரான் இசைத்தவாறு, வேறு யாரும் இசைக்க வல்லார் உளரோ? இல்லை என்பதாம் !
Is there anyone else who can sing the praises of that peerless thing in the universe (Parabrahman) and the one that is the end point of all wisdom (Sriman Narayana) in the beautiful and flourishing Tamil language with his peerless command of speech in a musical form which will never be destroyed as The Lord of Thirumazhisai (Thirumazhisai Azhwar) has done ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக