செவ்வாய், 17 மார்ச், 2026

ஆலாலம் வெண்பா

 ஆலால முண்டா னலுதித் தடைந்தாறு

வேலாலே வென்றான் விதிசிறைத்தான் - பாலாழி
பாம்பணையான் கண்டோன்று பாவை மணமுடித்தான்
சாம்பிணியைப் போக்குமவன் றாள்


ஆலாலம் உண்டான் அனல் உதித்து அடைந்து ஆறு
வேலாலே வென்றான் விதி சிறைத்தான் பால் ஆழி
பாம்பு அணையான் கண் தோன்று பாவை மணம் முடித்தான்
சாம் பிணியை போக்கும் அவன் தாள்

ஆலால விடத்தை உண்டவனான சிவபெருமானின் நெருப்புப் பொறியில் உதித்து கங்கை ஆற்றை அடைந்து பின்பு வேலால் சூரணியை வென்று, பிரமனை சிறைபிடித்தவன், பாற்கடலில் பாம்பில் அணையும் திருமாலின் கண் தோன்றிய மக்களை மணந்தவனான முருகப் பெருமானின் தாள் சாவு என்னும் பிணியைப் போக்கும் !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...