புதன், 18 மார்ச், 2026

வீடுபெற வெண்பா

 வீடுபெற வேண்டினும் வாழ்வை விழையினுந்

தேடியருள் வள்ளிமலைச் சீருரைப்போம் - வேடர்

மடந்தை யுவந்து மணந்த கடம்ப

னடந்த சிலம்பை நயந்து 


வேடர் மடந்தை - வள்ளியம்மை; உவந்து மணந்த கடம்பன்- முருகப்பெருமான்;

நடந்த சிலம்பை நயந்து- வள்ளிமணம் புரிவதற்காக நடந்த மலையை நயந்து 

வீடு பெற வேண்டினும் வாழ்வை விழையினும் - வீட்டின்பமோ அல்லது வாழ்வின்பமோ எதனை வேண்டினாலும்; தேடி அருள் வள்ளிமலை சீர் உரைப்போம் - தேடி வந்து அடியார்களுக்கு அருளும் இடமான வள்ளிமலையின் பெருமைகளை உரைப்போம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...