வியாழன், 19 மார்ச், 2026

சாற்றமுது வெண்பா

சாற்றமுதுஞ் சோறுங் கறியமுதுஞ் சார்ந்திருப்பார்

மாற்றமுதைக் கொள்வரோ வாய்ப்பிருந்து - மேற்றமிகு

தாய்மொழியின் மேன்மைநிலை தாந்தெளிய வேற்றவரின்

வாய்மொழிசொல் சார்வதுமென் மாண்பு


சாற்றமுதும் சோறும் கறியமுதும் சார்ந்து இருப்பார் - தமக்குப் பொருந்திய உணவான சாற்றமுது(இரசம்) சோறு கறியமுது ஆகியவற்றைச் சார்ந்திருப்பார்கள் 

வாய்ப்பு இருந்தும் மாற்று அமுதை கொள்வரோ - வாய்ப்புக் கிட்டினும் வேறுணவை உண்வரோ (இல்லை என்பதாம்)

அவ்வாறே 

ஏற்றம் மிகு தாய்மொழியின் மேன்மை நிலை தாம் தெளிய - ஏற்றம் மிக்க தாய்மொழியான (தமிழின்) மேன்மை நிலை தாம் தெளிந்த பின்னும் 

வேற்றவரின் வாழ் மொழி சொல் சார்வதும் என் மாண்பு - பிறரின் மொழியைச் சார்ந்திருப்பது எவ்வகையான மாண்பாகும்? 

தாய்த்தமிழைப் பயின்று காப்பீர் என்பது கருத்து 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...