உமையொரு பாகன் உகந்தருண் மைந்தா
சுமையிரு தோளுஞ் சுமந்து -னமைவிட
நோக்கி யலையலையா நோற்று வருவார்தம்
வாக்கிற் கிசைவாய் மகிழ்ந்து
மகிழ்ந்திரு மாதர் வலத்து மிடத்துந்
திகழ்ந்திரு செந்தமிழ் வேலா -வகழ்வார்க்
ககத்துள் ளொளியாய் மிளிர்வா யரசே
முகத்தாறும் புன்முறுவல் பூத்து
பூத்தர வன்பர் புகழ்பாட நல்லடியர்
சாத்திர வல்லார் தகைசாற்ற -நேர்த்தியரு
ணில்லா தளிக்கு நிமலவுன் நாமத்தாற்
கல்லாங் கசிந்து கனி
கனியொன்றிற் காகக் கடுஞ்சினங் கொண்டு
மனைதுறந்து நின்றாய் மலைமே -னினைவார்க்கு
ஞானமருள் கோலேந்து நாத வடைவெமக்கு
வானமருண் மான்மருகன் றாள்
தாளாத வன்புடைய தந்திமுகன் றம்பிக்கு
மாளா தடிமைசெய்து வாழ்வினிக்க -மூளாது
போகவினை யாவும் புகழார நன்மாலை
தோகைமயில் சேவெலெனச் சூட்டு
சூடுங் குளிரும் சுடரொளியும் பாழிருளும்
வீடும் விடாவாழ்வும் வேறாமோ -பாடுபுகழ்
சந்தத் தரசர் தமிழ்சூடி யுண்மகிழுங்
கந்தக் கடவுடர நோக்கு
நோக்கி மதனழித்த வொப்பி னுதல்விழியான்
காக்குந் தொழில்புரியுங் கார்வண்ண -னாக்கு
மலரா னமரரும் வாழ்த்து மழக
னிலையும் பிணிதீர்க்கு மே
ஏழைக் கிரங்கு மிறைவ வடிவேலா
லாழிவற்றிக் கல்லழித் தாண்டருளுங் -கோழிக்
கொடிய விளமைகுன்றாக் கொற்றகுற வள்ளிக்
கொடிமனத்தைக் கொண்டாய் களவு
களவுகற் பென்ற விருமணமுங் காட்டு
மளவடங்கா வாற்றல் வடிவ -விளையாட்டாய்க்
காதலும் போருங் கடைக்கண்ணா லன்பருக்
கீதலு மேற்குமுந் நோக்கு
நோக்கு நினைவும் நுழைந்த பரம்பொருளே
யேக்கந் தணித்தரு ளின்னமுதே - சேய்க்கென்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக