நடைப்பயண மேற்கொள்ள நல்லபயன் கிட்டு
மிடைக்கொழுப்பு நீங்கு மிதமா - யடைப்பின்றிச்
செங்குருதி யோடு மிதயஞ் சிறந்தியங்கு
மங்கா தொளிரு மதி
மதியா முகமொளிரு நீள்வாழ்வு வாய்க்கு
முதியா தொழியு முடனோய் -முதுமையிலுங்
காக்குங் கெடுசோம்ப னீக்கும் பலவிடங்கள்
போய்க்களிக்கப் பூக்கு மகிழ்வு
மகிழ்வான சிந்தை மனவலிமை கூட்டு
நிகழ்காலத் தாளு நினைவு -சுகித்திருக்க
வீச னளித்த வெளிய வழியன்றோ
வாசி லழகு நடை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக