திங்கள், 9 மார்ச், 2026

ஓதம் வெண்பா (கரப்பு)

 ம் பணிதுயில்வா னும்பர்மோயாது

சூதாண்டு நாட்டுவான் றூமலரா ணாதன்

கரிதுரைச் சக்கரத்துக் காத்தருளு நீணா

வரவுர்கூக் கையே சரண்



ஓதம் பணி துயில்வான் - பாற்கடலில் திருவனந்தாழ்வான்கண் துயில்பவனான
சூது ஆண்டும் உம்பர் நலம் ஓயாது நாட்டுவான் - எப்பாடுபட்டாவது தனது அடியார்களான உம்பர்கள் நலத்தைப் பேணுபவனான
தூ மலராள் நாதன் - திருமகளின் கேள்வன்
கரி துயரை சக்கரத்து காத்து அருளும் - கஜேந்திரனுக்குத் திருவாழியை வீசி மோக்‌ஷம் அருளிய
நீள் நா அரவு உயர் கூக்கு ஐயே சரண் - நீண்ட நாவை உடைய திருவனந்தாழ்வான் தனது தலையில் உயர்த்திப் பிடிக்கும் பூமி பிராட்டியின் தலைவனான திருமாலே நமக்குச் சரண்
திருமந்திரம் (அஷ்டாக்‌ஷர மந்திரம்) பாடலுள் கரந்து நின்றது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...