திங்கள், 30 மார்ச், 2026

சிவன் தந்த தமிழ் குறள்வெண் செந்துறை

வற்றா வூற்றா வளத்தை வழங்குங்
குற்றா லத்தான் கொடுத்த தமிழே



ஆலங் குடித்த வாதி தந்த   
காலங் கடந்த மூலந் தமிழே  

யானை யுரித்த வீசன் றந்த 
ஞான முரித்த நகையாந் தமிழே 

பணிநதி புனைந்த பரமன் றந்த 
வணிநிதி யாகு மழகுத் தமிழே 

இடத்தின் மங்கைக் கிடந்தரு நாத
னுடுக்கை பிறந்த வுயர்வாந் தமிழே 

முப்புர மெரித்த மூல னன்ன 
தப்பறி யாத தகைமை தமிழே 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...