வியாழன், 12 மார்ச், 2026

சூரன்வீழ சந்த விருத்தம்

 சூரன்வீழ வேலெறிந்த தோகைநாதன் வீரமோ

மாரன்வீழ வடிவுடைத்த மாலுணர்த்து கோலமோ

பாரின்வீழ்ந்த வுயிர்களுய்யப் பற்றறுக்குங் கருணையோ

வோரின்வாழ்வி லோங்குமத்த மூப்பிலாத மூலனே 



சூரனை வீழ்த்த வேல் எறிந்த மயல்வாகனனின் வீரத்தையோ, காமனை வெல்லும் அழகு மிகுந்து பார்ப்பவர்களை மயக்கும் தோற்றத்தையோ, பாரின் கண் இழிந்த உயிர்களுக்கு உய்வு அளிக்கப் பற்றை அறுக்கும் மிக்க கருணையையோ, இக்குணங்களின் யாதொன்றையாவது எண்ணினோமாயின் செல்வங்கள் ஓங்கும் அன்றோ மூப்பொன்றறியா மூலவனே முருகனே !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கூடி நின்று (ஸ்ரீ ஜெயந்தி விருத்தம்)

  கூ டி நின்று பாடல் பாடி விழவெ டுக்கு நாளிலே நாடி நின்ற நல்ல ருள்ள நாத னுன்னை யெண்னவே தேடி வந்த குட்ட னாய்நின் சேட்டை காண வல்லமே சீடை யோ...