புதன், 11 மார்ச், 2026

சூரனை வெண்பா

 சூரனை வீழ்த்திச் சுரருலுக மீடரப்

போரினிற் புன்னகைத்த வென்றியான் - மாரனை

வீழ்த்தும் வடிவுடைய வேலன் மயலதனி

லாழ்த்த வணங்கிவளை யாள்  


சூரனை வீழ்த்தி சுரர் உலகை மீள் தர போரினில் புன்னகைத்த வென்றியான்- சூரனை வீழ்த்தி தேவர்கள் உலகை மீட்டுத் தர போரினில் புன்னகைத்த வெற்றியாளன் 

மாரனை வீழ்த்தும் வடிவுடைய வேலன் - காமனை வீழ்த்தும் அழகுடைய தலைவனான வேலன் 


மயல் அதனில் ஆழ்த்த அணங்கு இவளை ஆள் -  மயலில் ஆழ்ந்த இப்பெண்ணை வந்து ஆள்வாயாக (செவ்வேளே)! 


ஆழ்ந்த வல்லின விகாரம் பெற்று ஆழ்த்த என நின்றது 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...