வாகை சூடு வையக் கோனே
தோகை சூடு தூயாள் கேள்வ
வூழி முதல்வ வாழி துயில்வ
வுனக்கு மொருகுறை யுரைப்பேன் கேளா
யடிமை செயலுனக் கறவே யிலையே
அனைத்திலும் வெற்றி வாகை சூடும் உலகையெல்லாம் ஆள்பவனே, அழகிய தோகையைச் சூடும் தூயவளான திருமகளின் கேள்வனே, ஊழி முதல்வனே பாலாழியின் கண் துயில்பவனே, உனக்கும் கூட ஒரு குறையை உரைப்பேன் அதைக் கேளாய்,அடிமை செய்வது என்பது உனக்கு இல்லவே இல்லை, நீ தான் யாவற்றிற்கும் சேஷி என்பதால்!
vAgai sUdu vaiyak kOnE
thOgai sUdu thUyAL kELva
vUzhi mudhalva vAzhi thuyilva
vunakkum orukuRai yuraippEn kELAy
adimai seyalunak karavE yilaiyE
Oh Victorious one and ruler of all worlds, the one who adorns a beautiful feather and is the lord of Sri, the one who is beyond all cataclysms and the one who sleeps in the ocean of milk, even for you I will point out a flaw! You do not have any capabality to be a servant of anyone as you are the master of everything!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக