வேலைப் பணிக ணறிதுயி லிருந்தும்
வீறும் பணிகள் விண்ணே ரிருந்தும்
மானைத் துயரை யத்துளி யழித்த
மாலைத் தொழுநற் சோலை நாடர்
மாலே செயினு மாலை தருவார்
மாலை வெம்மை மறையச் செய்வார்
மனந்தள ராதே மான்விழி மாதே
தோழி கூற்று- தலைவன் வந்து கற்பு மணம் புரிவார் என்று தலைவிக்கு உரைத்தது
தலைவி தன் தலைவன் வந்து கற்பு மணம் புரியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளார், அப்போது தோழி அவளைத் தேற்றுகிறாள். நமது தலைவனானவர் திருமாலின் அடியார், திருமாலுக்கு ஆற்றவேண்டிய பணி விண்ணுக்கு நேராக இருந்தாலும் , பாற்கடலில் ஆதி சேடனின் மீது யோக நித்திரை புரிந்துகொண்டு விளங்கியும், கூப்பிட்ட ஒரு குரலுக்குக் கஜேந்திரனை அந்நொடியே சென்று காத்தார்! தலைவரான நற்சோலை நாட்டினர் திருமாலின் அடியார் என்பதால், கொஞ்சம் மாய வித்தை காட்டுவார் என்றிருந்தாலும் வந்து மாலை தந்து உம்மைக் கற்பு மணம் புரிவார், பிரிவினால் மாலைப் பொழுது தரும் வெம்மையையும் வந்து நீக்குவார் , மனம் தளராதே மானைப் போன்ற அழகிய கண்களை உடைய தலைவியே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக