நீர்வேண் மருகனாய் வந்தாளு
நீர்வேண் முருகனாஞ் செந்தேனே
சூர்வேர் சிதைத்தருள் செய்யற்கே யோர்வேல் கரத்ததா ளெம்மானே
சார்வே துனையன்றி யெங்கட்குக்
கூர்வேல் விழிமங்கை காதலனே
நீர்மே லெழுத்தென்ற வெம்வாழ்வைப்
பார்மேற் சுவர்க்கமா மாற்றுவையே
நீர் வேள் மருகனாய் வந்து ஆளும் - பாற்கடலில் சயனிக்கும் அழகனான திருமாலின் மருகனாய் வந்து ஆள்கின்ற
நீர் வேள் முருகன் ஆம் செம் தேனே- நீர் தான் வேள் என்னும் முருகன் ஆகும் செந்தேனைப் போன்றவன்
சூர் வேர் சிதைத்து அருள் செய்யற்கு - சூரனை வேரோடு சிதைத்து பிற உயிர்கட்கு அருள் புரிவதற் பொருட்டு
ஓர் வேல் கரத்து அது ஆள் எம்மானே - தனி வேலைக் கரத்தினில் ஆளும் எமது நாதனே
உனை அன்றி எங்களுக்கு சார்வு ஏது - உன்னை அல்லால் எஙட்குச் சார்வு என்பதேது உண்டு
கூர்வேல் விழி மங்கை காதலனே - கூர் வேல் போன்ற கண்ணழகை உடைய வள்ளியம்மையின் காதலனே
நீர் மேல் எழுத்து என்ற எம் வாழ்வை - நீர் மேல் எழுத்தைப் போன்ற நிலையற்ற எமது வாழ்க்கையை
பார் மேல் சுவர்க்கம் ஆ மாற்றுவையே - பாரின் கண் வாழும் போதே சுவர்க்கத்தைப் போன்று மாற்றுவாயன்றோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக