என்பை யுயிராக்கி யேற்ற வழியளித்
தின்ப மறம்வளர வில்வாழ்வி லன்பாற்
றனைவருத்திச் செல்வந் தழைத்தோங்கச் செய்யு
மனைவிக்கு வேறாரோ மாற்று
என்பை உயிராக்கி - தனது என்பிலிருந்து குருதியின் ஊடே உயிரை விளைவித்து அதற்கு ஊட்டமும் அதனூடே அளித்து
ஏற்ற வழி அளித்து- தனது குடும்பத்திற்கு ஏற்ற பாதையை அமைத்தளித்து
இன்பம் அறம் வளர - இன்பமும் அறமும் வளரும்படியாக
அன்பால் தனைவருத்தி - அன்பின் பொருட்டே குடும்பத்திற்காகத் தன்னை உடலளவிலும் மனவளவிலும் வருத்தியும் கூட
செல்வம் தழைத்து ஓங்க செய்யும் - பதினாறு விதமான செல்வங்களும் தனது குடும்பத்திற்குத் தழைத்து ஓங்கும் படியாகச் செய்யும்
மனைவிக்கு வேறு ஆரோ மாற்று- மனைவிக்கு வேறு யார் தான் மாற்றாக முடியும், முடியாது என்பதாம்
enbai uyiraakki yeetra vazhiyaLithth
thinbam aRamvaLara vilvaazhvil anbaaR
Ranaivaruththich chelvan dhazhaiththoongach cheyyu
manaivikku veeRaaroo maatru
She who converts her bones into a new life, and grants all highness to her family, and who gives the purusharthas of Dharma and Kama and with love also grants the purushartha of artha by bestowing it even at the cost of exerting and straining her physical and mental self and makes her family excel, to that person known as wife is there any replacement?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக