வியாழன், 16 ஏப்ரல், 2026

கார்முகில் வண்ணன் அறுசீர் மண்டிலம்

 கார்முகில் வண்ணன் மீது 

   காதலில் வீழ்ந்த பெண்கள்

நீர்முக மாடி நிற்க

   நேர்த்தியாய்க் கவர்ந்தா னாடை

சீர்தரு மொப்ப டைப்பைத்

   தேர்முகங் கொண்டா னேனோ

ஓர்புக னீயென் பார்க்கே

   யுடையுளஞ் சேர்த்தீ தற்கே

கார்முகில் வண்ணன் மீது காதலில் வீழ்ந்த பெண்கள் - கார்முகில் வண்ணனான கண்ணன் மீது காதலுற்ற கோபிகையர்கள்

நீர்முகம் ஆடி நிற்க - நதியின் கண் நீராடி நிற்கும் பொழுது

நேர்த்தியாக ஆடை கவர்ந்தான் - அவர்கள் ஆடையை நேர்த்தியாகக் கவர்ந்துச் சென்றான் அக்கார்முகில் வண்ணன்

சீர் தரும் ஒப்படைப்பை - அனைத்துச் செல்வங்களையும் தரும் ஒப்படைப்பு என்னும் பெருஞ்செல்வத்தை

தேர்முகம் கொண்டான் ஏனோ?- அவர்களிடம் உள்ளதா என்று ஆராய்ந்தான் கண்ணன், இது ஏனோ?

ஓர் புகல் நீயே என்பார்க்கே - நீ தான் எங்களது ஒரே சார்வு என்று சொல்வார்க்கே 

உடை உள்ளம் சேர்த்து ஈதற்கு - அபகரித்த உடையை மட்டும் அன்றி தனது உள்ளத்தையும் ஈவதற்கே அத்தேர்வை வைக்கின்றான் கண்ணன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீர்வேண் மருகனாய் அறு சீர் விருத்தம்(செவ்வாயிற் செவ்வேள்)

  நீர்வேண் மருகனாய் வந்தாளு நீர்வேண் முருகனாஞ் செந்தேனே சூர்வேர் சிதைத்தருள் செய்யற்கே யோர்வேல் கரத்ததா ளெம்மானே சார்வே துனையன்...