செவ்வாய், 14 ஏப்ரல், 2026

சித்திரை பிறந்து ஆசிரியப்பா

சித்திரை பிறந்து புத்தாண் டொளிரச்

சித்தர் தலைவன் சீரலை வாய்த்தே

பத்தர்க் கருளும் பைந்தமிழ்க் கடவுள்

சித்த மாகம் சீரா னிறைய

வொப்பில் கருணை தப்பா தீந்து

சார்வார் வாழ்விற் சேர்வான் றானே



சித்திரை பிறந்து புத்தாண்டு ஒளிர - சித்திரை மாதமும் புதிய ஆண்டும் பிறந்து ஒளிர
சித்தர் தலைவன் சீரலைவாய் தே - சித்தர் தலைவனும் சீரலை வாய் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தேவனுமான
பத்தர்கு அருளும் பைந்தமிழ் கடவுள்- தனது பத்தர்க்கு அருள் பாலிக்கும் பைந்தமிழ் கடவுளுமான முருகன்
சித்தம் ஆகம் சீரால் நிறைய - தன் பக்தர்கள் சித்தமும் உடலும் செல்வங்களால் நிறையும் படி
ஒப்பில் கருணை தப்பாது ஈந்து - தம் ஒப்பற்ற கருணையைத் தப்பாது அளித்து
சார்வார் வாழ்வை தானே சேர்வான்- தானே வந்து தன்னைச் சார்பவர்களின் வாழ்வில் சேர்வான்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிதரும் அறு சீர் மண்டிலம்

விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன  மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன  கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண  ம...