வெண்ணெய் திருடுஞ் சிறுபிளையா
வேள்விப் பயனாம் பரம்பொருளா
பெண்ணை மயக்கும் பாலகனா
பேய்முலை யுண்ட கோமகனா
மண்ணை விழுங்கு மாதவனா
மாபோர் வென்ற சாரதியா
கண்ணின் மணியா நிற்பவனே
கண்ணா யாவு மானவனே
வெண்ணெய் திருடும் சிறு பிள்ளையா- வெண்ணெயைத் திருடி உண்ணும் சிறுவனா இவன்
வேள்வி பயன் ஆம் பரம் பொருளா - வேள்வியின் இறுதிப் பயனாக விளங்கும் பரம் பொருளா இவன்
பெண்ணை மயக்கும் பாலகனா - பெண்களை மயக்கம் அடைய வைக்கும் அழகும் நடையும் கொண்ட இளையனா இவன்
பேய் முலை உண்ட கோ மகனா - பேய்ச்சியாக வந்த அரக்கியின் முலை உண்டு அவளை அழித்த இளங்கோவா
மண்ணை விழுங்கு மாதவனா - அசோதை அன்னையிடம் விளையாட்டாக மண்ணை விழுங்கி பின்பு அவளுக்கு அண்ட சராசரங்களைத் தன் வாயினுள் காட்டிய திருமாலா இவன்
மா போர் வென்ற சாரதியா- மகாபாரதம் என்னும் போரில் நின்று வென்ற அருச்சுனனின் சாரதியா இவன்
கண்ணின் மணியாய் நிற்பவனே - எதுவாக இருந்தாலும் எமக்கு கண்ணின் மணியைப் போல் உயிருக்கு உயிராகி நிற்பவனே
கண்ணா! யாவும் ஆனவனே - கண்ணனே! யாவும் ஆனவனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக