செவ்வாய், 14 ஏப்ரல், 2026

குகனையே புத்தாண்டுப் பாக்கள்

 குகனையே தொழுது குதூகல மெய்தி

மகவுசேர் செல்வமு மாண்பும் பெற்றுப்

புகழிகழ் யாவுமே ஒன்றாய்க் காணுந்

தகைமைசெய் தவநெறிச் சால நிற்க


 ஆண்டது புதிதெனப் பிறந்தா லென்ன

யாண்டுமே உன்னையே யாறாய்க் கொள்வோம்

காண்டலும் கேட்டலும் கந்தன் நாம

மாண்டவா வாளவே விரைவில் வாவா 


கொடியுடைச் சேவலோன் குகனை நாளும்

படியிலே தொழுதிடும் பழுதில் பாங்க

ரடியினைத் தொழுதிடு மகத்தை யருள்வாய்

விடியவே வாழ்வெலாம் வேலா முருகா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீர்வேண் மருகனாய் அறு சீர் விருத்தம்(செவ்வாயிற் செவ்வேள்)

  நீர்வேண் மருகனாய் வந்தாளு நீர்வேண் முருகனாஞ் செந்தேனே சூர்வேர் சிதைத்தருள் செய்யற்கே யோர்வேல் கரத்ததா ளெம்மானே சார்வே துனையன்...