செவ்வாய், 14 ஏப்ரல், 2026

சித்திரை பிறக்க நிலை மண்டில ஆசிரியப்பா

 சித்திரை பிறக்கச் சீர்பல தருவான்

சொற்றுணை நின்று சத்தியத் தருள்வான்
சித்தர் தலைவன் சீரலை வாய்த்தே
அத்தனா ரூர னனற்கண் மைந்தன்
உத்தமி புதல்வ னற்றமிழ் நாதன்
மத்தள வயிறற் ககமகி ழிளையன்
நித்தியன் றிருமாற் கன்பு மருகன்

நற்றுணை மகவு நாற்றிசை நீள்புகழ்
அறம்பொரு ளின்பம் வீடு நல்கு
மறம்பொரு வேலனை வாழ்த்து மனனே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீர்வேண் மருகனாய் அறு சீர் விருத்தம்(செவ்வாயிற் செவ்வேள்)

  நீர்வேண் மருகனாய் வந்தாளு நீர்வேண் முருகனாஞ் செந்தேனே சூர்வேர் சிதைத்தருள் செய்யற்கே யோர்வேல் கரத்ததா ளெம்மானே சார்வே துனையன்...