வியாழன், 23 ஏப்ரல், 2026

என்னை வழிநடத்த செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

 என்னை வழிநடத்த வென்னை யுடனிருக்க

வென்ன விடையூ றெழநினைக்கு - முன்னை
வினையழிக்கு மூளு வினையொழிக்கும் வேல
னினைவிருக்க யாவு நிறைவு


என்னை வழி நடத்த என் ஐ உடன் இருக்க - என்னை வழிநடத்தும் பொருட்டு எனது தலைவன் என்னுடனே இருக்க

என்ன இடையூறு எழ நினைக்கும் - ஏதேனும் இடையூறுகள் எழவும் நினைக்குமோ ( நினைக்காது)

முன்னை வினை அழிக்கும் - எமது முன் செய் வினையை அழிப்பதுமான

மூளும் வினை ஒழிக்கும் - இனி மூளப்போகும் வினையை ஒழிப்பதுமான

வேலன் - வேலாயுதத்தை ஏந்திய தலைவ்னான முருகன்

நினைவு இருக்க - நினைவு என்றும் நமக்கிருக்க, அதே போன்று அவனது நினைவு நம்மேலிருக்க

யாவும் நிறைவு - அனைத்தும் நிறைவே!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆடிப் பூரத் தவதரித்தாள் அறுசீர் விருத்தம்

  ஆடிப் பூரத் தவதரத்தா ளாவி முழுது மாற்களித்தாள் பாடிக் களிக்கப் பாவைதனைப் பாருக் களித்த பல்வளையா ணாடித் தவிப்பி னயந்துரைத்தா ...