வியாழன், 23 ஏப்ரல், 2026

ஏழ்கடல் அறுசீர் மண்டிலம்

 ஏழ்கடன் மணலை யெண்ணு

மேதமாங் கட்சித் தேர்வு

பாழ்கடன் மூழ்கும் வாழ்வு
பாவிக ணாட்டை யாள

ஆழ்கட னஞ்சாய் நின்ற
தறிவிலா மக்க ளாட்சி

சூழ்கடல் பார்தா னுய்யத் துளிருமோ செங்கோ லாறே

கட்சி தேர்வு ஏழ்கடல் மணலை எண்ணும் ஏதமாம் - மக்களாட்சியில் ஒரு நல்ல கட்சியைத் தேர்வு செய்வது என்பது ஏழ் கடல்களில் உள்ள மணல்களை எண்ணும் குற்றம் போல் போக்கற்ற செயல்

பாவிகள் நாட்டை ஆள - நாம் தேர்வு செய்யும் பாவிகள் நாட்டை ஆள

பாழ் கடல் மூழ்கும் வாழ்வு - நம் வாழ்வானது பாழும் கடலில் மூழ்கும்

அறிவிலா மக்கள் ஆட்சி - அறிவிற்கு ஒவ்வாது இம் மக்களாட்சி என்னும் தத்துவம்

ஆழ்கடல் நஞ்சாய் நின்றது - ஏதோ ஒரு புதிய தத்துவம் தேடப் போய்ப் பின்பு ஆழ்கடலின் கண் தோன்றும் நஞ்சாய் நம் சமூகத்தில் நின்று விட்டது

கடல் சூழ் பார் உய்ய - கடலால் சூழப் பட்ட உலகம் உய்ய

துளிருமோ செங்கோல் ஆறு - மீண்டும் செங்கோல் மன்னர்கள் வழி பிறக்குமோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிதரும் அறு சீர் மண்டிலம்

விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன  மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன  கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண  ம...