வியாழன், 23 ஏப்ரல், 2026

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண் 

         அங்கிசேர் சான விக்கண் 

தங்குசீர் கிரண மாறுஞ் 

        சண்முகத் தேவாய்த் தோன்று 

மங்குதீர் நிச்ச லன்றன் 

       வைபவ மேத்தும் பூசை 

கொங்குதேர் வேட மங்கை 

       கோதமி புகழென் றாமே 


அங்கி சேர் மு கண் பொறியாம் - அக்கினி கண்ணான சிவபிரானின் மூன்றாம் நுதல்விழியில் தோன்றும் பொறியை 

அங்கி சேர் சானவிக்கண் - அக்கினி கொண்டு கங்கை என்னும் புனித நதியில் சேர்க்க

தங்கு சீர் கிரணம் ஆறும் - அதில் என்றுமே சீரானது தங்கும் ஒளியாய் திகழ்ந்த ஆறு கூறுகளும் 

சண்முக தேவாய் தோன்று - ஆறும் இணைந்து ஒரு சண்முகன் என்னும் முருகத் தேவனாய் தோன்று 

மங்கு தீர் நிச்சலன்றன் - இருளைப் போக்கும் சலனமற்றவனின் 

வைபவம் ஏத்தும் பூசை - பராக்கிரமங்களைச் சொல்லும் பாடலால் செய்யும் பூசைகள் 

கொங்கு தேர் வேட மங்கை கோதமி - தேனை விரும்பித் தேடும் வேட குலத்தில் பிறந்த இருளை அகற்றி ஞானம் கொடுப்பவளான வள்ளி தேவியின் 

புகழ் என்று ஆமே - புகழையே செப்புகிறது என்றுணர்க !


angisEr poRiyaa muKKaN 

angisEr jahnavik kaN 

thanguseer kiraNam aaRum 

shanmugath thEvaayth thOnRu 

mangutheer nischalanRan 

vaibhavam Eththum poojai 

kongudhEr vEda mangai

Gothami pugazh enRaamE 


The fire spark which originated in the third eye of Shiva, and which was carried by Agni and deposited in the Jahnavi (Ganges), that auspicious sixfold light joined into one as Shanmukha Deva (Karthikeya) who is always an embodiment of eternal auspiciousness and has an unflinching attitude, those who do pooja and sing his praises in poetic metres are actually also praising the Devi vaLLi who is of the huntress clan who seek out quality honey in the forests, and one who removes the ignorance of any kind (Gothami)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...