கருவைக் கொல்லுங் கணையி னின்று
காக்குங் கதிர்மறைத்துப்
பொருவில் சொல்லைப் பொய்யா திருக்கப்
போற்று மாழியனை
உருவி லருவி லுணர்வா லுடலா
லுணரு மடியர்தமை
இரவும் பகலு மிமையா தேத்து
மிசைவைக் கொண்மனனே
கருவை கொல்லும் கணையின் இன்று காக்கும் - பரிக்ஷித் கருவில் இருக்கும் போது பிரமாஸ்திரம் ஏவி அழிக்க முயன்றான் அசுவத்தாமன், அதனின்று கருவை காப்பதுமான
கதிர் மறைத்து பொருவில் சொல்லை பொய்யாது இருக்க போற்றும் ஆழியனை- சூரியனை மறைத்து அருச்சுனனின் சொல்லைப் பொய்யாகாது (தான் ஜெயத்திரதனைக் கொல்வேன் என்று எடுத்த சபதம்) காத்த சக்கரத்தை உடைய கண்ணபிரானை
உருவில் அருவில் உணர்வால் உடலால் உணரும் அடியர் தம்மை- உடலால் உருவை உணர்ந்து, உணர்வால் அருவை உணர்ந்து என்றும் அவன் எண்ணத்திலே வாழ்வை மேற்கொள்ளும் அடியார்கள் தம்மை
இரவும் பகலும் இமையாது ஏத்தும் இசைவை கொள் மனனே- இரவு பகல் பாராமல் எவ்வேளையும் தூக்கும் கூட இன்றி அவ்வடியார்களின் புகழையே சாற்றும் இசைவை கொள்வாய் மனனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக