வியாழன், 16 ஏப்ரல், 2026

அமரரின் துயரறு அறு சீர் மண்டிலம்

அமரரின் றுயரற வழிசெயு 

      மருமறை யனுதினந் துதிசெயும்

இமயமுங் குமரியுந் தனதெனு 

      மிணையிலி திருவிடந் துதிசெயும்

உமையொரு பங்கனும் விழிகொள 

       வுலகினில் வரவழை குழந்தையின்

சுமையறு கதிதரு திருவடி 

       தொழுவரைத் துதிசெய விழைவமே

அமரரின் துயர் அற வழி செய்யும் - நித்ய சூரிகளின் துயரை இல்லாத படிச் செய்யும் 

அரும் மறை அனுதினம் துதி செய்யும் - அருமறைகளை ஆகிய வேதங்கள் என்றும் துதி செயாநிற்கும் 

இமயமும் குமரியும் தனது என்னும் இணையிலி திரு இடம் துதி செய்யும்- இமயம் முதல் குமரி வரை தன்னகத்தே அடக்கி வைத்துள்ள பாரத நாடு போற்றும் 

உமை ஒரு பங்கனும் விழி கொள்ள உலகினில் வரவு அழை குழந்தையின் - உமை ஒரு பங்கனான சிவபெருமானும் காண வேண்டும் என்ற ஆசையினால் உலகிற்கு வரவழைத்த குழுந்தையாகிய கண்ணனின் 

சுமை அறு கதி தரு திருவடி - சுமைகளை அறுக்கும் மற்றும் வீடளிக்க வல்ல திருவடிகளை 

தொழுவாரை துதி செய்ய விழைவமே - தொழும் அடியார்களை நாம் போற்ற விழைவோம்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆடிப் பூரத் தவதரித்தாள் அறுசீர் விருத்தம்

  ஆடிப் பூரத் தவதரத்தா ளாவி முழுது மாற்களித்தாள் பாடிக் களிக்கப் பாவைதனைப் பாருக் களித்த பல்வளையா ணாடித் தவிப்பி னயந்துரைத்தா ...