வியாழன், 16 ஏப்ரல், 2026

கடலாழம் அறு சீர் மண்டிலம்

 கடலாழ மீட்டுமைந்தன் கல்விதந்த வாசாற்குக் 

      கடன டைத்தாய் 

விடையேழைச் சென்றடக்கி விருப்பத்தின் மணமகளை 

     வென்று வந்தாய் 

தொடைதாக்க வீமற்குச் சொல்லுரைத்துச் சுயோதனற்குத் 

      தோல்வி தந்தாய்

படிமீதுன் புகழாரம் பறைசாற்றுஞ் செந்தமிழ்க்கே 

       பணிவீ தேவே

கல்வி தந்த ஆசான்கு கடல் ஆழம் மைந்தன் மீட்டு கடன் அடைத்தாய்- கல்வி கற்றுக் கொடுத்த ஆசானாகிய சந்தீபனி முனிவருக்குக் குரு தட்சினையாக, அவரது மைந்தனை கடல் ஆழம் சென்று பாஞ்சசனியன் என்னும் அசுரனை வென்று (பின்பு அதையே சங்காகக் கொண்டு) மீட்டுத் தந்தாய் 

சென்று விடை ஏழை அடக்கி விருப்பத்தின் மணமகளை வென்று உவந்தாய்- ஏழு விடைகளை அடக்கி நப்பின்னை பிராட்டியை மனைவியாகக் கொண்டு உவந்தாய்

தொடை தாக்க வீமனுக்கு சொல் உரைத்து சுயோதனனுக்கு தோல்வி தந்தாய்- தொடையினில் தாக்கச் சொல்லி அறிவுரை தந்து வீமனைச் சுயோதனனை வெல்லுமாறு செய்தாய்

படி மீது உன் புகழ் ஆரம் பறை சாற்றும் செந்தமிழுக்கே பணிவு ஈ தேவே- அவ்வாறே எமக்கும் உனது புகழைப் பறை சாற்றும் செந்தமிழ்ப் பாசுரங்கள் மீது பணிவு செல்லும் படி அமைப்பாயாக தேவனே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விழிதரும் அறு சீர் மண்டிலம்

விழிதருங்  காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன  மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன  கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண  ம...