செவ்வாய், 5 மே, 2026

அரை குறை வெண்பா(செவ்வாயிற் செவ்வேள்)

அரைகுறை ஞான மடரறி வாகும்

வரைகடந் தோங்கு மதியாய்க் - குரைகடல்
சூர்தடிந்த வேலன் றுணையிருக்க மூவுலகில்
ஆர்தடுக்க வாற்ற லுளர்



குரை கடல் சூர் தடிந்த வேலன் துணையிருக்க - ஒலி எழுப்பும் கடலின் கண் சூரனை மாய்த்த வேலாயுதத்தான் நம் துணையிருக்க

வரை கடந்து ஓங்கும் மதியாய் அரை குறை ஞானம் அடர் அறிவு ஆகும் - எல்லையைத் தாண்டி ஓங்கி வளரும் மதியென, அரை குறை ஞானமும் அடர்ந்த அறிவாய் மாறும்

மூ உலகில் தடுக்க ஆற்றல் உளர் ஆர் - மூவுலகிலும் நம்மைத் தடுக்கும் ஆற்றல் ஆருக்கு உளது? இல்லை என்பதாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீர்வேண் மருகனாய் அறு சீர் விருத்தம்(செவ்வாயிற் செவ்வேள்)

  நீர்வேண் மருகனாய் வந்தாளு நீர்வேண் முருகனாஞ் செந்தேனே சூர்வேர் சிதைத்தருள் செய்யற்கே யோர்வேல் கரத்ததா ளெம்மானே சார்வே துனையன்...