வியாழன், 7 மே, 2026

கனிதரு சுவையோ எழுசீர் மண்டிலம்

கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ 

       கடும்வெயில் பின்வரு மழையோ 

பனிதரு நிலவின் பதைவழி யொளியோ 

        படர்ந்தொளிர் பால்வெளி யழகோ 

சுனைதரு மணமோ சோர்வொழி யமுதோ

         துணைவரு துகளொழி திருவோ 

மனமகிழ் காதன் மாண்புரை செய்தல் 

        வைகலும் புதுமொழி வகையே 

(காதல் என்பது) கனி தரும் சுவையோ? கவி தரும் மகிழ்வோ? கடும் வெயிலுக்குப் பின் வரும் மழையோ? பனியைப் பொழியும் நிலவின் பதைவை அழிக்கும் ஒளியோ? படர்ந்து ஒளிரும் பால்வெளியின் அழகோ? சுனை தரும் மணமோ? சோர்வை அழிக்கும் அமுதமோ? துணைவரும் குற்றங்களை அழிக்கும் செல்வமோ? மனத்தை மகிழ்விக்கும் காதலின் மாண்புகளை உரைப்பது என்பது தினமும் ஒரு புதிய மொழியால் உரைக்க வல்லது அன்றோ!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...