வியாழன், 28 மே, 2026

வேழ மாமுகன் எழு சீர் மண்டிலம் (சந்தம்)

 வேழ மாமுகன் வீழ நின்றனை 

          வேடர் மாதிளை சேரவும்

வேழ மாவுரு பூண்டு வந்தனை 
      
         மீன லோசினி மைந்தனே
 
ஆழி கவ்வியன் றாட வைத்தனை 
     
         யாட னாயகன் மைந்தனே

வாழி வாழியென் றுன்னை யேத்தவே 

        வாழ்வி லின்பமா மென்றுமே


தேம கூவிளம் தேம கூவிளம் 
       தேம கூவிளம்  கூவிளம் 


வேழ மாமுகன் வீழ நின்றனை - கயாசுரன் செருவில் வீழ நீ அவனை வீழ்த்தி நின்றாய் 

வேடர் மாது இளை சேரவும் - வேடர் மாதான வள்ளி தேவி நினது இளையவனான முருகனைக் காதலில் சேர்வதற்காகவும் 

மா வேழ உரு பூண்டு வந்தனை - பெரிய யானையின் உருவம் கொண்டு அச்சமூட்ட நினது விளையாட்டை நடத்தினாய் 

மீன லோசினி மைந்தனே - அன்னை மீனாட்சியின் மைந்தனே

ஆழி கவ்வி அன்று ஆட வைத்தனை- விகடச் சக்கர விநாயகனாக நீ விஸ்வக்சேனரை ஆட வைக்க திருமாலின் திருவாழியைக் கவ்வினாய் பண்டொரு நாள் 

ஆடல் நாயகன் மைந்தனே - ஆடல் வல்லானான நடராஜரின் மைந்தனே 

வாழி வாழி என்று உன்னை ஏத்த - வாழி வாழி என்று உன்னை ஏத்துவதினாலாயே 

வாழ்வில் இன்பம் ஆம் என்றுமே - வாழ்வில் இன்பம் என்றென்றும் நிலைக்கும்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வேழ மாமுகன் எழு சீர் மண்டிலம் (சந்தம்)

 வேழ மாமுகன் வீழ நின்றனை            வேடர் மாதிளை சேரவும் வேழ மாவுரு பூண்டு வந்தனை                  மீன லோசினி மைந்தனே   ஆழி கவ்வியன் றாட வைத...