செவ்வாய், 26 மே, 2026

அருக்கனென அருளும் எழுசீர் மண்டிலம்

அருக்கனென வருளுங் கடைக்கண்க

ளன்பர்க் களவிலா தீயு மதுமாந்

திருக்கரங்கட் சூரன் செருக்கொழிக்குஞ் செவ்வேற்
றெய்வானை வள்ளி யணைப்பின்
விருப்பத்துச் சிவந்த திருமேனிப் பொழுதின்
விரைந்தோடு மயின்மீ தேறுந்
திருவடிகள் சேரச் சிந்தனைசெய் நெஞ்சே
திரும்பாது பிறவிச் சுழலே



கதிரவனைப் போன்று அருளும் கடைக்கண்களை உடையவனும், அன்பருக்கு அளவு இல்லாது ஈயும் அமுதாகும் திருக்கரங்களை உடையவனும், சூரனின் செருக்கை ஒழித்த வேலை உடையவனும், இரு தேவிமார்களான தெய்வானையும் வள்ளியும் அணைக்கச் சிவந்த திருமேனியை உடையவனும், நொடிப்பொழுதில் விரைந்தோடும் மயின்மீது ஏறுபவனுமான முருகனின் திருவடிகளைச் சேரச் சிந்தனை செய் உள்ளமே, அவ்வாறு செய்தால் பிறவிச் சுழல் என்பது திரும்பாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அருக்கனென அருளும் எழுசீர் மண்டிலம்

அருக்கனென வருளுங் கடைக்கண்க ளன்பர்க் களவிலா தீயு மதுமாந் திருக்கரங்கட் சூரன் செருக்கொழிக்குஞ் செவ்வேற் றெய்வானை வள்ளி ய...