வியாழன், 28 மே, 2026

தோழி இல்லை என்று எழு சீர் மண்டிலம்

 தோழி யில்லையென் றேங்கு மாந்தரே 

        சூழு மாயையைக் காண்கிலீர்

தோழி வந்தபின் வாழ்வி னிம்மதி 

        தூச தாவதைக் காண்குவீ

ரேழை யாகுவீர் பாழில் வாழுவீர் 
 
      யாண்டும் வேண்டுவீர் முன்னிலை
 
யாழி போன்றவ ளாழ மெண்ணுவோ 

      ரான்ம சிந்தனை யாள்வரே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...