கட்டும் பரமனி னிடப்பாகம்
பற்றக் கரையினில் வெள்ளம் பெருத்தெழப்
பற்றக் கரையினில் வெள்ளம் பெருத்தெழப்
பற்றித் தழுவிய மடவாடன்
கற்றி னளிமிகு மிற்றைத் தினத்துளக்
கற்றி னளிமிகு மிற்றைத் தினத்துளக்
கட்டை யவிழ்த்தெழப் பெறுவேமோ
குற்றத் தவுணரின் கொற்றத் தடக்கிடக்
குற்றத் தவுணரின் கொற்றத் தடக்கிடக்
குன்றைப் பொடிசெய்த பெருமாளே
கற்றைச் சடை - கற்றைச் சடையின் கண்
பணி கொன்றை மதி நதி கட்டும் பரமனின் - பாம்பும், கொன்றை மலரும், பிறைச் சந்திரனும், கங்கை நதியையும் கட்டி வைத்துள்ள சிவபெருமானின் இடப் பாகம் பற்ற - இடப் பாகத்தை அடைய
கரையினில் வெள்ளம் பெருத்து எழ பற்றி தழுவிய மடவாள் தன் - சம்பை நதிக்கரையில் வெள்ளம் பெருத்து எழும் பொழுது தான் பூசை செய்த சிவலிங்கத்தை விடாது பற்றித் தழுவிய தேவியான பார்வதி தன்
கற்றின் அளிமிகு இற்றை தினத்து - கன்றான முருகப் பெருமானின் அருள் மிகுந்து உள்ள இன்றைய நாளான வைகாசி விசாகத்தில்
உள்ளத்து கட்டை அவிழ்த்து எழ பெறுவேமோ - உள்ளத்துள் உள்ள தளைகளை அவிழ்த்து இறை அனுபவம் பெறுவோமோ?
குற்றத்து அவுணரின் கொற்றத்து அடக்கிட - குற்றம் பல புரிந்த அசுரர்களின் கொற்றத்தை அடக்க
குன்றை பொடி செய்த பெருமாளே - கிரவுஞ்ச மலையை பொடியாக செய்த முருகப் பெருமானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக