ஞாயிறு, 31 மே, 2026

அடிமுடி எழுசீர் மண்டிலம்

விளம் மா விளம் மா 

   விளம் விளம் மா  

அடிமுடி யறியா வயனரிக் கன்றோ 

      ரனற்பிழம் பெனவுருக் கொண்டோய்

கடிமலர்க் கஞ்சன் பொய்யுரை கடிந்து 
  
       படிவழி படலவற் கழித்தோய் 
 
நெடியனி னுண்மை நெகிழ்த்திய துன்னை 

         நினதரு ணிறைமழை பொழிந்தோய்

பொடியனுக் கெந்தப் புனிதமு மில்லை 

          பொறுத்தருள் புனலணி பரமே 

அடி முடி அறியா அயன் அரிக்கு அன்று அனல் பிழம்பு என உரு கொண்டோய் - நினது அடியையும் முடியையும் அறியாத அயனுக்கும் அரிக்கும் , நீ அனல் பழிம்பாக உரு எடுத்து நின்றனை 

கடி மலர் கஞ்சன் பொய் உரை கடிந்து- மணம் கமழும் தாமரை மலர் மீது வீற்றிருப்பவனான பிரமன் உனது முடியைக் கண்டதாகப் பொய் உரைக்க, அதனைக் கடிந்து 

படி வழிபடல் அவனுக்கு அழித்தோய் - இவ்வுலகில் பிரமனுக்கு வழிபடல் நடக்காதவாறு செய்தாய் 

நெடியனின் உண்மை நெகிழ்த்தியது உன்னை - நெடியவனான திருமால், நினது அடியைக் காண இயலவில்லை என்ற உண்மையை உரைத்தது, உன்னை நெகிழச் செய்தது 

நினது அருள் நிறை மழை பொழிந்தோய் - நினது அருளான நிறைமழையை அவன் மீது பொழிந்தாய்

பொடியனுக்கு எந்த புனிதமும் இல்லை - பொடியனாகிய எனக்கு எந்த வித புனிதமும் இல்லை

பொறுத்தருள் புனல் அணி பரமே - அவ்வாறு இருக்க, கங்கையை அணிந்த  தான் உன்றன் அளவற்ற கருணையைக் கொண்டு எனது தவறுகளைப் பொறுத்து அருள வேண்டும் 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அடிமுடி எழுசீர் மண்டிலம்

விளம் மா விளம் மா     விளம் விளம் மா    அடிமுடி யறியா வயனரிக் கன்றோ        ரனற்பிழம் பெனவுருக் கொண்டோய் கடிமலர்க் கஞ்சன் பொய்யுரை கடிந்து   ...