புதன், 3 ஜூன், 2026

அகந்தை என்னும் எழு சீர் மண்டிலம்

 அகந்தையென்னுஞ் சேற்றை யறக்களைவா னாளு 

          மருமறைகள் போற்று மிறைவன்

சுகந்துறந்து நாளுஞ் சினமொழித்த முனிவர் 

         சுகந்தனையே யெண்வார் நெஞ்சி

லகந்திகழு மாலை வனுபவிக்க நாமு 

         மருந்தவத்தா ரில்லை யெனினு

முகுந்தனதே யாவு மெனவுணர்ந்து கொண்டான் 

          மூவுலகுந் தருவான் காணே

அகந்தை என்னும் சேற்றை- அகந்தை என்னும் உயிர்கட்கு ஒட்டிக் கொண்டிருக்கும் மலத்தை 

அற களைவான் நாளும் - இல்லாதபடி களைவான் என்றும் 

அருமறைகள் போற்றும் இறைவன் - அரும் மறைகள் போற்றும் இறைவன் 

சுகம் துறந்து நாளும் - இவ்வுலக சுகத்தை தினசரி துறந்து 

சினம் ஒழித்த முனிவர்- சினம் என்னும் உணர்ச்சியை முற்றிலுமாக ஒழித்த முனிவர்கள் 

சுகந்தனையே எண்வார் நெஞ்சில் - நறுமணம் வீசுபவனான (திருமாலையே) நெஞ்சில் தியானித்துக் கொண்டு இருப்பார்கள் 

அகம் திகழும் மாலை- அனைத்து உயிர்களுக்கும் அந்தர்யாமியாக வசிக்கும் திருமாலை 

அனுபவிக்க நாமும் - உண்முகமாய் அனுபவிக்க 

அரும் தவர்கள் இல்லை எனினும் - அரும் தவத்தைச் செய்ய வல்லார்கள் என்ற போதிலும் 

முகுந்தனதே யாவும் - அனைத்துலகும் அனைத்து உயிர்களும் முகுந்தனதே 

என உணர்ந்து கொண்டால்  - என்று உணர்ந்து கொண்டால் 

மூ உலகும் தருவான் காணே - அவன் அவனது உடைமைகளான மூன்று உலகங்களையும் நமக்கு அளிப்பதற்கு அணியாக இருப்பான் காணீர்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின்         சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள்          வேண்டு வார்துயர் தீர்ப்பவள்   காட்டி னட்...