திங்கள், 8 ஜூன், 2026

ஏற்ற கொள்கை எழு சீர் சந்த விருத்தம்

ஏற்ற கொள்கை யொன்றி னிற்ற லேற்ற மன்று வாழ்வினின்
மாற்ற நேரம் வந்த போது கொள்கை மாற்ற லாகுமோ
தோற்று வாழ்வி னேற்ற கொள்கை வெல்ல றூற்ற லாகுமென்
றூற்றை யன்ன புத்து தித்து மாற்ற லேற்ற லேற்றமே 


ஏற்ற கொள்கை ஒன்றில் நிற்றல் - ஏற்ற கொள்கையின் ஒன்றிலே எக்காரணம் கொண்டும் நிற்பது என்பது 

ஏற்றம் அன்று வாழ்வினில் - வாழ்வினில் ஏற்றம் என்பது அன்று 

மாற்ற நேரம் வந்த போது - மாற்றுவதற்கான நேரம் வந்த போது 

கொள்கை மாற்றல் ஆகுமோ - நம்மால் கொள்கையினின்று மாற்றல் என்பது செய்ய முடியுமா ?

வாழ்வில் தோற்று கொள்கை வெல்லல் -கொள்கையை மட்டும் வெல்ல வைத்து வாழ்வில் தோற்றல் 

தூற்றல் ஆகும் என்று - தூற்றத் தக்க செயலாகும் என்று உணர்ந்து 

ஊற்றை அன்ன புத்து உதித்து - ஊற்று போல என்றுமே தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருந்து 

மாற்றல் ஏற்றல் ஏற்றமே - மாற்றி அமைக்க ஏற்பது என்பதே ஏற்றம் ஆகும் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மார்பிருந்து எழு சீர் மண்டிலம் (சந்தம்)

  மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க ளங்க ளீபவள்  சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்  போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ ணீ...