ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

பொருணோக்கி கட்டளைக் கலித்துறை

 பொருணோக்கிச் சென்ற பொருடான் பெரிதோ பொறுத்திருந்தா

ளிருணோக்கி நின்னினை வாழ்ந்து குறைந்த வெடைசிறிதோ

மருணோக்கி வாரா திராதே விரைவின் மணம்புரிவா 

வருணோக்கி செந்தமிழ் நாடா வகவை வளர்கிறதே 

தோழி தலைவனை விரைவில் வந்து தலைவியை மணம் புரிய அழைத்தல் 

பொருள் நோக்கி சென்ற பொருள் தான் பெரிதோ - பொருளை ஈட்டும் பொருட்டு நீ தொலைதேயம் சென்ற பொருள் அவ்வளவு பெரியதோ?

பொறுத்து இருந்தாள் - உனக்காகப் பொறுத்து இருந்த தலைவி 

இருள் நோக்கி நின் நினைவு ஆழ்ந்து குறைந்த எடை சிறிதோ - இரவின் இருளை நோக்கி நீ வருவாயென ஆழ்ந்து குறைந்த எடை சிறிதா என்ன? இல்லை என்பதாம் 

மருள் நோக்கி வாராது இராதே - பொருள் மீது உள்ள மயக்கத்தால் தலைவியைப் பார்க்க வாராமல் இருக்காதே!

செந்திமழ் நாடா அருள் நோக்கி விரைவில் மணம் புரி வா - செந்தமிழ் நாட்டவனே! தயவு கூர்ந்து விரைவில் வந்து அவளைத் திருமணணம் புரிய வருவாய் 

அகவை வளர்கிறதே - வயது தலைவிக்கும் உனக்கும் ஏறிக் கொண்டு போகிறது அன்றோ 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொருணோக்கி கட்டளைக் கலித்துறை

  பொருணோக்கிச் சென்ற பொருடான் பெரிதோ பொறுத்திருந்தா ளிருணோக்கி நின்னினை வாழ்ந்து குறைந்த வெடைசிறிதோ மருணோக்கி வாரா திராதே விரைவின் மணம்புரிவ...