செவ்வாய், 22 செப்டம்பர், 2026

விழுந்தால் விழா !

 விழுந்தால் விழா இழந்தால் எழுச்சி

அழுங்கால் அணைவு அணைந்தால் மகிழ்வு

எழுங்கால் தெளிவு இணைந்தால் மலர்ச்சி

ஒழுங்கில் ஒடுங்க உணர்வாய் உயிரே


(காதலில்) விழுந்தால் விழா (திருமணம்) அதனில் மனத்தைக் காதலரிடம் இழந்தால் அது எழுச்சியில் தான் சேர்க்கும்! அழும்படியான கடினமான நிலை வருமாயின் அக்காதல்/ காதலரின் அணைப்பு நமக்கு ஏதுவாய் அமையும், அவ்வாரு அணைத்தால் அது நமக்கு மகிழ்வை அளிக்கும்,இவ்வாறாகப் பல அனுபவங்கள் ஏற்பட்டு நமக்கு தெளிவாகிய ஞானம் பிறக்கும், இரண்டறக் காதலர்கள் ஒன்றிணைதல் என்பது காதலின் உச்ச மலர்ச்சி, இவ்வாறாக ஒழுங்கு உள்ளது என்பதை உணர்ந்து அதில் ஒடுங்க உணர்வாய் எனது உயிரே!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வேனாதா மாலைமாற்று குறட்செண்டுறை

வேனாதாவீ டாறாமா தீரா வாதாளீ சாவா வாசாளீ தாவாரா தீமாறாடா வீ தானாவே  #மாலைமாற்று