செவ்வாய், 6 அக்டோபர், 2026

துண்ட வெண் பிறையன் கலித்துறை

துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னென்று

மண்ட மண்ணுல கந்தனைக் காப்பவ னாசை
கொண்ட பெண்ணுயிர் கண்மனத் தேற்பவன் கோலங்
கண்ட வந்நொடி யேகவி கள்பிறப் பெடுக்கும்

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன்- சிவபெருமானின் துயரைத் தீர்த்தவனுமான;அண்டம் மண் உலகம் தன்னை என்றும் காப்பவன்- விண்ணும் மண்ணும் அனைத்தையும் காப்பவனுமான;ஆசை கொண்ட பெண் உயிர்கள் மனத்து ஏற்பவன்-அவன் மீது ஆசை கொண்ட அனைத்து உயிர்களின்(அவனைத் தவிர அனைத்துயுர்களும் பெண்களே அன்றோ!அல்லது கண்ணனாக அவதாரம் கொண்ட போது கோபிகையர்களைக் கூறுவதாகவும் கொள்ளலாம்)மனத்தை ஏற்று மகிழ்பவனுமான திருமாலின்;கோலம் கண்ட அ நொடியே கவிகள் பிறப்பு எடுக்கும்-அழகிய திருவைக் கண்ட மாத்திரத்திலேயே கவிதைகள் தங்கு தடை இன்றி பிறப்பெடுக்கும் அன்றோ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துண்ட வெண் பிறையன் கலித்துறை

துண்ட வெண்பிறை யன்றுயர் தீர்த்தவ னென்று மண்ட மண்ணுல கந்தனைக் காப்பவ னாசை கொண்ட பெண்ணுயிர் கண்மனத் தேற்பவன் கோலங் கண்ட வந்நொடி யேகவி கள்பிற...