கோவிந்தா வென்றுரைக்கத் தீர்ப்பான் குறையெல்லாங்
கோவிந்தா வென்றுரைக்கக் குன்றதிர - நாவொளிரு
மங்கலங்கள் சூழுநம் வாழ்வி லமுதூறுந்
திங்களாளுஞ் சேத்திரனைச் சேர்
கோவிந்தா என்று உரைக்க குறை எல்லாம் தீர்ப்பான்-கோவிந்தா என்று அவனது சிறப்பான நாமத்தை உரைக்க,நமது எல்லாக் குறைகளையும் இறைவன் தீர்ப்பான்;குன்று அதிர கோவிந்தா என்று உரைக்க-திருவேங்கட மலையே அதிரும் படியாக பத்தர்கள் ஒருமித்த குரல்கலில் கோவிந்தா என்னும் நாமத்தை உரைக்க;நா ஒளிரும்- நாவும் மொழியும் பிரகாசிக்கும்;மங்கலங்கள் சூழும் நம் வாழ்வில்-நமது வாழ்வில் மங்கலங்கள் சூழாநிற்கும்;அமுது ஊறும் திங்கள் ஆளும் சேத்திரனை சேர்-ஆதலால் அமுது ஊறக் கூடிய திங்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ள திருவேங்கடம் என்னும் சேத்திரத்தில் வீற்றிருக்கும் திருவேங்கட முடையானை நாம் சேர்வோமாக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக