புதன், 27 செப்டம்பர், 2023

ஏகபாதம்

 மாதா தனமுண்ணா மானேர் மறையா மாதா தனமுண்ணா மானேர் மறையா மாதா தனமுண்ணா மானேர் மறையா மாதா தனமுண்ணா மானேர் மறையா #கலிவிருத்தம் 

 

 

மாது ஆ தனம் உண்ணா மான் ஏர் மறையா - சனத் குமாரர் மாது ஆதனம் உள் நா மான் ஏர் மறையா - முருகன் மாதா தனம் உண்ணா மான் நேர் மறையா - திருஞான சம்பந்தர் மாதாது அன முள் நா மான் நேர் மறையா - அருணகிரிநாதர்

 

மாது (பெண்) ஆ (மாடு) தனம் ( செல்வம்) உண்ணா ( இது எதையும் நுகராமல்) மான் ( மஹான்) ஏர் ( உயர்ந்த) மறையா (மறையின் வழி நட்ப்பவரே) - சனத் குமாரர்

 

மாது (அழகு) ஆதனம் (ஆசனம்) - மயில் உள் ( உள்ள) நா (பொலிவு கொண்ட) மான் நேர் (மானுக்கு நிகரான வள்ளியம்மையை) உடை மறை ஆ (வேதம் காட்டும் பாதையே) - முருகா

 

மாதா (உமா தேவியார்) தனம் உண்ணா ( முலையிலிருந்து நேரடியாக உண்ணாது பொற்குவளையில் ஞானப் பால் அருந்திய) மான் (மஹானே) நேர் மறையா (மறையவர் குளத்தின் திலகமே திருஞான சம்பந்தா )

 

மாதாது (தாது என்றால் தேன், மாதாது இங்கு அம்ரிதத்தைக் குறிக்கும்) அன (அதைப் போன்ற ) முள் நா ( கூர்மையான, நுண்மையான சொல்லை உடையவரே) மான் (மஹானே) நேர் மறையா ( நீ பாடிய திருப்புகழுக்கு நேராக மறையும் ஒன்று உண்டோ) - அருணகிரிநாதர்

 

படம்      படம் படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...