திங்கள், 16 அக்டோபர், 2023

பரதன் இராமரிடம் பாதுகை பெற்றபோது சொல்வதாக

பரதனாள தரணியாவும் விரதமாள புனிதனைப்
    பணியுமாறு மணியமான பரிவலாத வனையென
வரதனாரு வனமுமேவ கரடுமேடு பாதையின்
    மலரதான பதமுநோவ வரசதாள பாதுகை
மரமதாக மருவிமேவு மசைவிலாத வகமுள
    மதியிலாத விதிசொலாலே மனதுவேக வுயிரினை
இரதனாரு மகலுமாறு விதியிராத வேழையா
    யிசையிலாத நடனமாக விழிவதானே னானுமே
-எண்சீர் ஆசிரிய விருத்தம்


பரதன் ஆள தரணி யாவும் விரதம் ஆள புனிதனை
பணியும் ஆறும் அணியமான பரிவிலாத அனை என
வரதனாரும் வனமும் மேவ கரடு மேடு பாதையில்
மலர் அதான பதமும் நோவ அரசு அது ஆள பாதுகை
மரம் அதாக மருவி மேவும் அசைவிலாத அகம் உள
மதி இலாத விதி சொல்லாலே மனது வேக உயிரினை
இரதனாரும் அகலும் ஆறு விதி இராத ஏழையாய்
இசை இலாத நடனமாக இழிவு அது ஆனேன் நானுமே

"Bharatha should rule the world and the holy one ( Rama) should undergo austerities" thus proclaimed the loveless mother (mine) like her,

That Rama should suffer in the forest in a difficult surrounding while his flower like feet would pain,and his footwear would be ruling our country,

The mind which had become like a tree (vegetable) with no movement due to the foolish and fate ordained words decided to part with his life (Dasharatha, my father)

Alas I don't even have such a fate (to forgo my life),and behold I have become like a music less dance (Like Kaikeyi)

May be art

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...