செவ்வாய், 24 அக்டோபர், 2023

சரஸ்வதி பூஜை

May be an illustration of text 
வெண்கமலத் தாசனமும் வினையறுக்குந் திருவடியும்
தண்டெனவே காலிரண்டுந் தாங்கிடுமாந் துடியிடையைப்
பண்ணிசைக்கும் யாழுடைய படைத்தருளு மிருகரமும்
விண்டொழுகு மாயகலை யேடுசெப மாலையுடைத்
தொண்டரரு ளிருகரமுஞ் சுந்தரமா மணியணியும்
வண்முலையு மறிவளிக்கும் வேயுறுவா மிருதோளும்
கண்ணமுதாம் விழியிரண்டுங் கருணைசெயக் காத்திருக்கத்
திண்ணநமக் கருடருவாட் டிசைமுகர்தந் தலைவியுமே
 
-தரவு கொச்சகக் கலிப்பா
 
அறிவாளிக்கும் வண்முலை - பர அபர ஞானங்களின் ஊற்றாக முலைகளை உருவகம் செய்வது மரபு 
 
நினைத்தமாத் திரத்திலே நினைவிலே நிறைபவள் உனைத்தொழத் தினந்தினம் உதிக்குமே உணர்கவி வினைப்பயன் விழிக்கொள விதித்தனை வரந்தனை முனைப்பிலே முளைக்குமோ உயர்கலை மகட்டுணை #கலிவிருத்தம் 
 
 
நலந்தருங் கல்விதரும் நல்லுயிர்க்கு ஞானம் பலந்தரும் பான்மைதரும் பாசமறும் பாரீர் குலஞ்செழித் தோங்கிவருங் கூறுமவ ணாமம் வலம்வரச் சித்திபெறும் வாக்கு #வெண்பா
 
வெண்டா மரையமர் வாளை கரமீரால் வீணைமீட்டும் பண்டோ துமறை பகரேடு மாலை படைத்தவளைத் திண்டா டுமுலகந் தெய்வத் திருவருட் டேர்ந்துபெற விண்டேத் துவதை வினையாய்ப் பயில்வோம் வகைவகையே #கட்டளைக்கலித்துறை
 
படம்   
 
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...