ஞாயிறு, 28 ஜனவரி, 2024

திருமழிசை ஆழவார் போற்றி

 

ஆறுமாறு மாறுமா யாதிதேவ னேத்தியே கூறுமாறை யோரவே குறைகணீங்கி போகுமே ஈறிலாத வீசனை ஈரிலாளு மேதையா மீறிலாறு கூறிய பத்திசாரன் வாழியே #கலிவிருத்தம்

 

படம் 

 

ஆறும் ஆறும் ஆறுமாய் ஆதி தேவன் ஏத்தியே கூறும் ஆறு ஓரவே குறைகள் நீங்கி போகுமே ஈறில்லாத ஈசனை ஈரில் ஆளும் மேதையாம் ஈறு இல் ஆறு கூறிய பத்திசாரன் வாழியே

 

6*6*6 -216 பாடல்களில் ஆதி தேவனான ஶ்ரீமன் நாரயணனை யேத்தி கூறும் வழியை நாம் ஆராயவே (நமது) குறைகளானது நீங்கிப் போகும் அந்தமே இல்லாத இறைவனை இரண்டில் ( திருச்சந்த விருத்தம் , நான்முகன் திருவ்ந்தாதி )ஆண்ட மேதை நமது இறுதி வீடு பேற்றிற்கு வழி சொன்ன பத்திசாரன் ( திருமழிசை ஆழ்வார்) வாழியே

 

நான்முகன்றன் றாதையைத் தானுவந் தேத்தினான் றேன்றமிழி லாழ்ந்து சிறந்தொளிர - வான்புகழும் பத்திசாரன் பாடலைப் பாதம் பணிந்தேத்த நித்தியனு நீங்கா னமை #வெண்பா

 நான்முகன் தன் தாதையை தான் உவந்து ஏத்தினான் தேன் தமிழில் ஆழ்ந்து சிறந்து ஒளிர வான் புகழும் பத்திசாரன் பாடலை பாதம் பணிந்து ஏத்த நித்தியனும் நீங்கான் ந(ம்)மை

 

நான்முகன் தாதையான நாராயணனை உவந்து தேன் தமிழியில் ஆழ்ந்து ஏத்தினான் சிறந்தொளிர பத்திசாரன் , அப்பாடல்களை வணங்கி நாம் பணிந்து போற்றினால், நித்தியனான் பகவான் நம்மை என்றும் நீங்க மாட்டான்     

 

ஒரு சந்தவிருத்தமும் ஒரு நேரிசை வெண்பாவும் திருமழிசையாழ்வாருக்குச் சாத்த முயல்வு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...