வியாழன், 22 பிப்ரவரி, 2024

தாய்மொழி யகவல்

தாய்மொழி காக்க தன்னுயிர் மீட்க
வாய்வழி வருநற்  சொற்க டன்னைத்  
தேன்மொழித் தமிழைத் தவிர்த்துப் புழங்கு  
மேனைய மொழிக் கலப்பின்றிப் பயில
ஆன வரையி லருந்தவ மாக
மனமுஞ்  சித்து முடலு முயிருந்
தினமுஞ் செபிக்க இறையாய்த் துதிக்க
விழைவோம் விரும்பி ஏற்றம் பெறவே
நுழைவோம் நீண்ட மரபின் நீட்சி
யாகச் சான்றோர் சங்கங் காத்த
வாகாய் விளங்கும் தெய்வத் தமிழை
எழுத்துஞ் சொல்லும் பொருளு மணியும்
வழுவாக் கற்று வளத்துடன்  வாழ்வி
லொவ்வொரு சிறிய நிகழ்விலும் கூட
செவ்வனே நம்மொழி சிறப்பா யாள
நாமும் பயின்று பிறர்க்கும் விளக்கி
காமம் கொண்ட காதல ரன்ன
கவிதை பாடிக்  களிப்புறச் செய்வோம்
நவிலத் தக்க நூற்பல வுளவே
அதனைக் கற்க நாளுஞ் சிலவே
மதிதரு மமுதா யென்றும மொளிரும்
கதிபெற் றுய்ய விலக்கியக் கடலின்
முத்துக் குளிக்க முயல்வோம்
முத்துக் குமரன் மொழியாந் தமிழே   
 
- ஆசிரியப்பா

 

தமிழ் கடவுள் முருகன் எவ்வாறு பிறந்தார்? - QuoraTAMIL ('தமிழ்') - THE HISTORY : | Cost-effective Translation & Voice-over

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...