வெள்ளி, 22 மார்ச், 2024

வஞ்சிக் குறவா கட்டளைக்கலித்துறை

வஞ்சிக் குறவா வழிவழி நின்ற வரையரையா வஞ்சிக் குறவா விழிவழி சென்ற வடிவழகா வஞ்சக் கரவான் விழிவழி மக்கண் மணம்புணர பஞ்சக் கரவான் வழிவழி வென்ற வறுமுகனே 

#கட்டளைக்கலித்துறை  

 

 

படம் 

 

வஞ்சிக்கு உறவா வழி வழி நின்ற வரை அரையா வஞ்சிக்கு உறவா விழி வழி சென்ற வடிவு அழகா அம் சக்கரவான் விழிவழி மக்கள் மணம் புணர பஞ்சக் கரவான் வழி வழி வென்ற அறுமுகனே

வஞ்சிக்கு உறவா(ய்) (பார்வதிக்கு உறவான) வழி வழியாக மலையை ஆளும் அரசே (தாத்தா மலையரையன்,தந்தை கயிலை ஆள்பவன் ) வஞ்சிக்கு (வள்ளிக்கு) உறவாக விழி வழி சென்ற வடிவழகா (வள்ளியைக் களவு மணம் செய்யச் சென்றாய்) என்றாலும்

அம் சக்கரவான் (திருமால்) விழியினில் பிறந்த மக்களை மணம் முடிக்க ஐந்து கரங்களை உடைய கணபதி வழி தான் வழி பிறந்து வென்றாய் ஆறுமுகனே

படம்படம்படம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...