அலைகட லன்று தனித்துவ நோக்கி லடங்கியபின் அலைகட லென்று மறிந்து கொளலா மதேசமயம் அலைகட லன்று கடைந்தான் உளனே அனைத்துயிரில் அலைகட லொன்று சிறப்பை யறிந்தா ருரைத்தனரே #கட்டளைக்கலித்துறை
அலை கடலன்று தனித்துவம் நோக்கில் அடங்கியபின் அலை கடலென்றும் அறிந்து கொ(ள்)ளலாம் அதே சமயம் அலைகடல் அன்று கடைந்தான் உளனே அனைத்துயிரில் அலை கடல் ஒன்று சிறப்பை அறிந்தார் உரைத்தனரே
அலை என்பது கடல் அன்று அதன் தனித்துவத்தை நோக்கினால் , என்றாலும் அது கடிலனில் அடங்கியபின் அலையும் கடலும் ஒன்றென்றும் அறிந்து கொள்ளலாம் , அலைகடலை அன்று கடைந்தவனான நாராயணன் அனைத்துயிருக்குள்ளும் உள்ளான் ( கடலைப் போன்று ) தனியாக பார்த்தால் உயிர்க்கு தனித்தன்மை உள்ளவாறும் தோன்றும் (அலையைப் போல)
இது விசிட்டாத்வைத தத்துவத்தில் சரீர சாரீர உறவாக கொள்ளப்படுகிறது ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் , அலை கடலினுள் அடக்கம், ஒரு வகையில் அலை தான் கடல் ஒரு வகையில் அது வேறு என்றவாறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக