செவ்வாய், 5 மார்ச், 2024

விசிஷ்டாத்வைதச் சிந்தனைகள்

 அலைகடலிலை கடலலையிலை கடலிலையெனி லலையில்
அலைகடலிடை நிலைகுறைவள ரதனொடுக்கமுங் கடலில்
அலைகடலிலை நிதமிதவுரு அரியெனுமொரு விதையில்
அலைகடலுல குயிரதனுட னிலைகுலைவிலை யடைவே
#கலிவிருத்தம்

 

 

Srimad Ramanujacharya’s doctrine of Vishishtadvaita Vedanta. 



அலை கடல் இல்லை கடல் அலை இல்லை கடல் இல்லை எனில் அலை இல்(லை)
அலை கடல் இடை நிலை(பெறுதல்) குறை (தல்) வளர் (தல்) அதன் ஒடுக்கமும் கடலில்
அலை கடல் இலை( ஆலின்) நி(த்)தம் மித(க்கும்) வுரு அரி எனும் ஒரு விதையில்
அலை கடல் உலகு உயிர் அதனுடன் நிலை(பெறும்) குலைவு இல்லாது அடைவே

அலை கடல் இல்லை கடல் அலை இல்லை ( அதாவது இரண்டும் வேறு வேறு ) என்று சொல்லலாம் , என்றாலும் கடல் இல்லை என்றால் அலை இல்லை!

எவ்வாறு அலையானது வளர்ந்து நிலைபெற்று குறைந்து பின் கடலினுள்ளே ஒடுங்குமோ அதே போன்று அனைத்துலகும் உயிரும் ஆலினிலை மேல் மிதக்கும் ஹரியாகிய விதைக்குள் தனது நிலை குலையாமல் ஒடுங்கும் ஊழிக் காலத்தில் ஆலினிலை மேல் மிதக்கும் பாலனாக தனக்குள் அனைத்தையும் அடக்கும் பரப்பிரம்மம் என்பது கருத்து


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...