தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன தனதான
கந்தக் கடவுளை யந்திப் பகலெனச்
சிந்தித் துருகிட வந்தித் துளமகிழ்
பந்தத் துணையுட னிந்தப் பிறவியின் பயனேக
விந்தக் கலியினி லின்புற் றொழுகிட
வின்பக் குறமுக ளன்புத் துணைவனைக்
கம்பத் திளையனைச் சங்கத் தமிழினி லழகாக
நந்தற் குமரனி னங்கப் பறைபெற
நங்கைத் திருமக ணங்கட் கருளிய
சங்கத் தமிழினைச் சந்தத் தமைவுடன் பலகாலு
நண்ணித் தொழுதெழ வெண்ணத் துயரிய
வண்ணக் கவிமழைப் பண்ணிற் கிசைந்திட
கண்ணித் துணையுடன் கண்ணி புனைந்திட வுளமார
தந்தித் துகிலுரி கங்கைச் சடைமுடி
யங்கத் திடமுறை நங்கைக் களவிலி
யின்பப் புதல்வனைத் துங்கக் கரியனைக் கவினாகச்
சந்தப் புலவனைக் கந்தற் கடியனை
யெந்தப் புலவனு மண்டற் கரியனை
விந்தைப் புகழுரை தந்திக் கிறைவனைப் பலபாடு
மந்தக் கவிஞனைச் சிந்தைத் தொழுதிட
விந்தக் கடையனு மன்புப் பெருகிட
வந்தித் தருளிட செஞ்சொற் பலவரு டனைநாளு
முந்திப் பிறவளிச் சந்திப் பிழையிலி
யெந்தத் தடையிலி யுந்தத் திறமருள்
சிந்தைப் பொலிவுற சித்தந் தெளிவுற குருநாதா
கந்தக் கடவுளை அந்திப் பகல் எனச் சிந்தித்து உருகிட வந்தித்து உளம் மகிழ் பந்தத் துணை உடன் இந்தப் பிறவியின் பயன் ஏக
இந்தக் கலியினில் இன்புற்று ஒழிகிட இன்பக் குற மகள் அன்புத் துணைவனைக் கம்பத்து இளையனைச் சங்கத் தமிழினில் அழகாக
நந்தன் குமரனின் அங்கப் பறை பெற நங்கை திருமகள் நங்கட்கு அருளிய சங்கத் தமிழினைச் சந்தத்து அமைவுடன் பல காலும்
நண்ணித் தொழுதெழ எண்ணத்து உயரிய வண்ணக் கவிமழைப் பெண்ணிற்கு இசைந்திட கண்ணித் துணை உடன் கண்ணி புனைந்திட உளமார
தந்தித் துகில் உரி கங்கைச் சடை முடி அங்கத்து இடம் உரை நங்கைக்கு அளவிலி இன்பப் புதல்வனை துங்கக் கரியனைக் கவினாகச்
சந்தப் புலவனைக் கந்தன்கு அடியனை எந்தப் புலவனும் அண்டற்கு அரியனை விந்தைப் புகழ் உரை தந்திக்கு இறைவனைப் பல பாடும்
அந்தக் கவிஞனைச் சிந்தைத் தொழுதிட இந்தக் கடையனும் அன்புப் பெருகிட வந்தித்து அருளிட செஞ்சொல் பலவருள் தனை நாளும்
உந்திப் பிற வளி சந்திப் பிழை இலி எந்தத் தடை இலி உந்தத் திறம் அருள் சிந்தைப் பொலிவு உற சித்தம் தெளிவு உற குரு நாதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக