திங்கள், 4 மார்ச், 2024

மாசி மகம்

 பாசத்தை நீக்கும் பதிக்கு மகன்மீது

 பாச மிருப்பது பாங்கன்றோ - ஈசற்கே

 ஆசானா யோங்காரத் தாழ்பொருளை யின்றுரைத்தான் 

மாசி மகத்து மகத்து #வெண்பா
 
 
படம் 
 
சிகியேறும் பாலன் சிறந்தளித்தான் காட்சி 
சிகிதோகை சூடுஞ் சிறுவ னிகராகப் பூசணியா 
மண்ணணிப் பூண்கோலங் கண்ணுற்றே 
மாசி மகத்து மகத்து #வெண்பா
 
சிகி ஏறும் பாலன் சிறந்து அளித்தான் காட்சி சிகி தோகை சூடும் சிறுவன் நிகராக பூசு அணியா மண் அணி பூண் கோலம் கண்ணுற்றேம் மாசி மகத்து மகத்து சிகி - மயில் பூசு - திருநீறு மண் - திருமண்
 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...