வியாழன், 18 ஏப்ரல், 2024

மாறன்றுதி

மாறானை மாறிலா மங்கையாய்த் தன்னை மனமுவந்து மாறான் றனக்கு மனநீக்க மாறன் முறைதொழுவே மாறான் மறுப்பனோ மாட்டானே மாறனை மார்பணைப்பான் மாறானின் மார்புறை வாள்மா ணவனன்றோ மாறனுமே #கட்டளைக்கலித்துறை

தன்னை மங்கையாய் மனமுவந்து மால்(மயக்கம்) தான் மனம் நீக்க மாறானை ( திருமாலை) மாறிலாது மாறன் ( நம்மாழ்வார் ) முறைதொழவே , மால் தான் ( திருமால் தான்) மறுப்பனோ? மாட்டானே! மாறனை ( நம்மாழ்வாரை ) மார்பணைப்பான் ( தலைவனாய்) (ஏனென்றால்) மாறானின் மார்புறைவாள் ( திருமாலின் மார்புறையும் இலக்குமியின்) மாணவன் அன்றோ மாறனுமே திருமகளின் மாணவனுக்குத் தெரியாதா திருமாலின் அன்பை அடையும் வழியெதுவென வென்பது கருத்து 

படம் 

(சேனை முதிலியாராக வைகுந்தத்தில்)
திருமகளின் மாணவனுக்குத் தெரியாதா திருமாலின் அன்பை அடையும் வழியெதுவென வென்பது கருத்து
1

 
திருமகளின் மாணவனுக்குத் தெரியாதா திருமாலின் அன்பை அடையும் வழியெதுவென வென்பது கருத்து
1

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவராத்திரி அந்தாதி (ஒன்பதிர வீறுமுதலி)

காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ்  செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே  னான்முகனைத் தான்படைத்த நாரண...